இந்தியா

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 274 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது 4வது விமானம்

Published On 2023-10-15 08:25 IST   |   Update On 2023-10-15 08:25:00 IST
  • இந்தியர்களை அழைத்துவர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
  • அதன்படி, இன்று 4வது விமானத்தில் 274 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

புதுடெல்லி:

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்குள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 447 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3வது விமானத்தில் 197 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 274 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 4வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 800க்கும் அதிகமான இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News