இந்தியா
மழைநீர் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு
- மழைநீர் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
- இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்
மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஹெய்டார்கார் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் விவசாய நிலத்தை பார்வையிட காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில், காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) எடுக்க டிரைவர் முயன்றார்.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த பள்ளம் மழைநீரால் நிரம்பியிருந்தது.
இதனால் காரில் இருந்த ஷகீலா பி (30), நிகாட் (13), அயன் (10), ஷாத் (7) ஆகியோர் உயிரிழந்தனர். கார் பள்ளத்தில் கவிழ்ந்ததும், கிராமத்தினர் உடனடியாக விரைந்து, மூன்று பேரின் உடலை மீட்டனர். காருக்குள் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல், மாநில பேரிடர் மீட்புப்படை அணியால் மீட்கப்பட்டது.
காரில் பயணம் செய்த மேலும் இருவரை கிராமத்தினர் உயிருடன் மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.