இந்தியா

இந்திய ரெயில்வே வரலாற்றில் முதல் முறையாக 2 இன்ஜினியர்கள் மீது வழக்குப்பதிவு.. ஏன்?

Published On 2025-11-05 03:46 IST   |   Update On 2025-11-05 03:46:00 IST
  • இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
  • இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் 9ஆம் தேதி காலை, தானேவின் கசாராவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினல் ரெயில் நிலையத்திற்கு புறநகர் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

மும்பை புறநகர் பகுதியான மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், படிக்கட்டுகளில் நின்றிருந்த சிலர் ஓடும் ரெயில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக ரெயில் போலீசார் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

அதில், 'விபத்துக்கு சில நாட்களுக்கு முன் அந்த வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை என்பது தொழில்நுட்ப அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் கவனக்குறைவாக செயல்பட்ட, உதவி கோட்டப் பொறியாளர் விஷால் டோலாஸ் மற்றும் மூத்த பிரிவு பொறியாளர் சமர் யாதவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்ட்டுள்ளது.

ரெயில்வே வரலாற்றில் அதன் ஊழியர்கள் மீது நேரடியாக வழக்குப்பதிவு செய்திருப்பது இதுவே முதன்முறை ஆகும்.  

Tags:    

Similar News