இந்தியா

வெற்றி பெற்ற தானிராம் சாதில்

இமாச்சல பிரதேசத்தில் மருமகனை வீழ்த்திய மாமனார்

Published On 2022-12-09 11:36 GMT   |   Update On 2022-12-09 11:36 GMT
  • ராணுவ கர்னல் தானிராம் சாதில் சோலன் தொகுதியில் வெற்றி.
  • ராஜேஷ் காஷ்யபை 3858 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சிம்லா.

இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ கர்னலுமான தானிராம் சாதில் (வயது82) சோலன் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும் மருமகனுமான ராஜேஷ் காஷ்யபை 3858 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதன் மூலம் அவர் சோலன் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். தானிராம் சாதில் மகளின் கணவர் ராஜேஷ் காஷ்யப் ஆவார்.

கடந்த முறையும் சோலன் தொகுதியில் மாமனார் தானிராம் சாதில், மருமகன் ராஜேஷ் காஷ்யப் இடையே தான் போட்டி இருந்தது. அப்போது சாதில் 671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இப்போது 3-வது முறையாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்ட மிக வயதான வேட்பாளரும் தானிராம் சாதில் ஆவார்.

Tags:    

Similar News