இந்தியா

மனைவியுடனான தகராறில் 3 மாத குழந்தையை தரையில் வீசிய தந்தை கைது

Published On 2023-08-25 12:01 IST   |   Update On 2023-08-25 12:01:00 IST
  • ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசினார்.
  • விஷ்ணுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கன்னியாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் குமாரபுரம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசினார்.

தரையில் வீசப்பட்ட குழந்தை பயங்கரமாக அலறியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கீழே வீசப்பட்டதில் காயமடைந்த கைக்குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விஷ்ணுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

Tags:    

Similar News