ஜனவரி மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 2.38% குறைவு: வர்த்தக பற்றாக்குறை 23 பில்லியன் டாலராக அதிகரிப்பு
- ஜனவரியில் இந்தியா 2.68 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
- கடந்த டிசம்பர் மாதம் 4.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம், பொருளாதாரத்தில் உலகளாவிய நிலையற்றத்தன்மை ஆகியவற்றால் ஜனவரி மாதத்தில் 37.32 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய வணிக அமைச்சகத்தின் தரவுகள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில் 2024 ஜனவரியை விட 2025 ஜனவரி மாதத்தில் 10.28 சதவீதம் அதிகரித்து 59.42 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 222.99 பில்லியன் பற்றாக்குறையாகும். பற்றாக்குறை என்பது இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம் ஆகும்.
2024-2025 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரை 10 மாதத்தில் ஏற்றுமதி 1.39 சதவீதம் அதிகரித்து 358.91 பில்லியன் டாலராக உள்ளது. அதேவேளையில் இறக்குமதி 7.43 சதவீதம் அதிகரித்து 601.9 பில்லியன் டாலராக உள்ளது. இந்த 10 மாத காலத்தில் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தக பற்றாக்குறை 242.99 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16.55 பில்லியன் டாலராக இருந்தது. டிசம்பர் மாதம் 21.94 ஆக அதிகரித்திருந்தது.
இதற்கிடையே வணிக செயலாளர் சுனில் பார்த்வால் கூறுகையில் "உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்னமையில் இருந்தபோதிலும் இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவை துறைகளில் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2023-2024 நிதியாண்டில் 778 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. 2024-2025 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்க 800 பில்லியன் டாலரை் என்ற மைல்கல்லை தொடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாத்தில் இந்தியா 2.68 பில்லியன் டாலர் அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் இது 1.9 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 4.7 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16.56 பில்லியன் டாலர் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்கு செய்திருந்தது. இந்த வருடம ஜனவரி மாதம் 13.43 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15.27 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருந்தது.