இந்தியா

மாநில தேர்தல் அதிகாரிக்கு மம்தா எச்சரிக்கை: வீடியோ ஆதாரங்களை கேட்கும் தேர்தல் ஆணையம்

Published On 2025-10-11 18:45 IST   |   Update On 2025-10-11 18:45:00 IST
  • மாநில அதிகாரிகளை தலைமை தேர்தல் அதிகாரி மிரட்டியதாக மம்தா குற்றச்சாட்டு.
  • மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஊழல் குற்ற்சாட்டை வெளியிடுவதாக மம்தா எச்சரிக்கை.

மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆனால், மம்தா பானர்ஜி SIR-ஐ கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில் தலைமை செயலாளர், மந்திரி அரூப் விஸ்பா ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆதிகாரி மாநில அதிகாரிகளை மிரட்டியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். அத்துடன், எல்லையை மீறினால் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முதல்வரானார். அதில் இருந்து தற்போதுதான் முதன்முறையாக மாநில தேர்தல் அதிகாரி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் மம்தா பேசியது மற்றும் அதை மொழிமாற்றம் செய்யப்பட்ட வீடியோவை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாநில தேர்தல் அதகாரி மீது எந்தவொரு குற்றச்சாட்டு வைக்கப்படுவதாக இருந்தாலும், ஆதாரங்களுடன் லோக்பாலில் முறையிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News