இந்தியா
null

ஆன்லைனில் விளையாடிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

Published On 2023-02-10 05:18 GMT   |   Update On 2023-02-10 05:35 GMT
  • ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தற்போது வருமான வரிச் சட்டங்களின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
  • ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரிகள் கழிக்கப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

புதுடெல்லி:

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தற்போது வருமான வரிச் சட்டங்களின்படி 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் வெற்றி பெற்றால், கேமிங் நிறுவனம் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு வரியை கழிக்க வேண்டும்.

வருமானவரி சட்டம் 1961-பிரிவு 194 பி-ன் படி லாட்டரிகள் அல்லது குறுக்கெழுத்து புதிர்களில் வெற்றி பெற்ற வருமானத்திற்காக செலுத்துவதற்கு வரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத வரிகள் கழிக்கப்படவில்லை என்பது வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கேமிங் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற் பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Tags:    

Similar News