இந்தியா

நெடுஞ்சாலை நடைமேம்பாலத்தில் செல்லும் ஆட்டோ.

மும்பையில் நெடுஞ்சாலையை கடக்க நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச்சென்ற டிரைவர்

Published On 2022-08-20 08:09 IST   |   Update On 2022-08-20 08:09:00 IST
  • நடைமேம்பாலத்தில் படிக்கட்டு இல்லை.
  • பொது மக்கள் ஏற வசதியாக சாய்வு பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

மும்பை :

டிரைவர் ஒருவர் ரோட்டை கடந்து செல்ல நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச்சென்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆபத்தை உணராமல் நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி சென்றவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தநிலையில் டிரைவா் ஆட்டோவை ஓட்டிச்சென்ற நடைமேம்பாலம் மும்பை அருகே விரார் பகுதியில் உள்ள மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையில் இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " நடைமேம்பாலத்தில் படிக்கட்டு இல்லை. பொது மக்கள் ஏற வசதியாக சாய்வு பாதை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த சாய்வு பாதை வழியாக நடைமேம்பாலத்தில் ஆட்டோவை டிரைவர் ஓட்டிச் சென்று நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவரை தேடி வருகிறோம் " என்றார்.

Similar News