கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை கொலை செய்து சமையலறையில் புதைத்த மனைவி..!
- கள்ளக்காதல் கணவருக்கு தெரிந்ததால் கொலை செய்ய திட்டம்.
- 3 பேர் உதவியுடன் கொலை செய்து சமையலறையில் உடல் புதைப்பு.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சமீர் அன்சாரி. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்கேஜ் பகுதியில் கட்டுமான தொழில் (கொத்தனார்) வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும் ரூபி என்ற பெண்ணிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ரூபிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வகேலா என்பவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது அன்சாரிக்கு தெரியவந்து, மனைவியை அடித்து உதைத்துள்ளார். இனிமேல் கணவன் உயிரோடு இருந்தால், வதேலாவுடனான கள்ளக்காதலை தொடர முடியாது என நினைத்த ரூபி, கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இது தொடர்பாக கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். கள்ளக்காதலன் வகேலா, அவரது உறவினர்கள் ரஹீம் மற்றும் மோசின் ஆகிய மேலும் இரண்டு பேரை இவர்களது திட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.
அன்சாரி வீட்டிற்குள் சென்ற 3 பேரும், ரூபி உதவியுடன் அன்சாரியின் கழுத்தை அறுத்து தீர்த்துக்கட்டினர். பின்னர் உடலை சமையலறையில் குழி தோண்டு புதைத்துள்ளனர். அத்துடன், டைல்ஸ் ஒட்டி குழி தோண்டிய அடையாளம் இல்லாத வகையில் மறைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வருடம் ஆகிறது. ரூபி அந்த வீட்டில் பல மாதங்கள் தங்கியுள்ளார். பின்னர், வேறு வீட்டிற்கு மாறியுள்ளார். வீடு பூட்டிக்கிடந்ததை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சந்தேகம் வந்துள்ளார். இந்த வீட்டில் வசித்து வந்த அன்சாரி என்பவரை பல மாதங்களாக பார்க்கவில்லை என போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தும்போது, வதேலா வசமாக சிக்கிக் கொண்டார். வதேலாவின் வாக்குமூலம் அடிப்படையில் ரூபி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய விவரம் தெரியவந்தது. வீட்டை உடைத்து சமையலறையில் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை எடுத்துள்ளனர். அதை சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் அவர்களை நெருங்குவதை அறிந்து கொண்ட ரூபி, ரஹிம், மோசின் தலைமறைவாகியுள்ளனர்.