இந்தியா

திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்

Published On 2023-11-13 04:11 GMT   |   Update On 2023-11-13 05:44 GMT
  • தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
  • ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.

இதனையொட்டி சர்வ பூ பால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். மூலவருக்கு அதிரசம் படையிலப்பட்டது.

நேற்று அவரவர்கள் வீட்டிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 74,807 பேர் தரிசனம் செய்தனர். 21, 974 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரவில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் இதமான தட்ப வெப்பநிலை உள்ளது.

Tags:    

Similar News