இந்தியா

(கோப்பு படம்)

ஜாமர் கருவிகளை தனியார் பயன்படுத்துவது சட்ட விரோதமானது- மத்திய அரசு எச்சரிக்கை

Update: 2022-07-04 10:30 GMT
  • தனியார் நிறுவனங்கள் ஜாமர், பூஸ்டர் கருவிகளை கொள்முதல் செய்ய முடியாது.
  • இது குறித்து விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி சட்டவிரோதம்.

மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனியார் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச்செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்யமுடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்டவிரோதம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சமிக்ஞை பூஸ்டர்களைப் பொருத்தவரை, உரிமம் பெறப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ செல்பேசி சமிக்ஞை பூஸ்டர்களை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பியில்லா ஜாமர்களை தங்களது இணையவழி தளத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News