இந்தியா

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கோரி பொதுநல மனு தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

Published On 2024-04-22 07:42 GMT   |   Update On 2024-04-22 07:42 GMT
  • அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
  • டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

புதுடெல்லி:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் சிறையில் பாதுகாப்பு, மருத்துவ குறைபாட்டை கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு சிறப்பு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அபிஷேக் சவுத்ரி என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. மேலும் மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

Tags:    

Similar News