இந்தியா

கார்பே வாக்ஸ் கொரோனா தடுப்பூசி 

கார்பே வாக்ஸ் கொரோனா தடுப்பூசியை, பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

Published On 2022-06-04 21:16 GMT   |   Update On 2022-06-04 21:16 GMT
  • 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
  • 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கார்பே வாக்ஸ் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு அனுமதி

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவேக்சின் மற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த மார்ச் 16 தொடங்கப்பட்டது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10ந் தேதி தொடங்கியது-

நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம்193,96,47,071 தடுப்புசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கார்பே வாக்ஸ் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக 'கார்பேவாக்ஸ்' என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு அனுமதி வழங்க கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் பயாலஜிக்கல்- இ நிறுவனத்தார் விண்ணப்பித்தனர்.

இந்த தடுப்பூசியின் பரிசோதனை தரவுகளை ஆய்வு செய்த தொழில்நுட்பக்குழு பரிந்துரைந்தது. இதை பரிசீலித்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், கார்பேவாக்ஸ்' தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு நேற்று அனுமதி அளித்துள்ளது.

2-வது டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு செலுத்தி, 6 மாதங்கள் ஆனவர்கள் இந்த 'கார்பேவாக்ஸ்' தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News