இந்தியா

PoK மக்கள் தாமாக இந்தியா திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை: ராஜ்நாத் சிங்

Published On 2025-05-29 15:40 IST   |   Update On 2025-05-29 15:40:00 IST
  • இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.
  • பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழ்ந்த தொடர்பு இருப்பதாக கருதுகிறார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் இந்திய குடும்பங்களின் ஒரு பகுதி. அவர்கள் தானாகவே இந்தியாவுக்கு திரும்பும் நாள் வெகு தொலையில் இல்லை என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிஐஐ பிசினஸ் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசும்போது கூறியதாவது:-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் நம்முடைய சொந்த மக்கள், நம்முடைய குடும்பத்தின் ஒரு பகுதியினர் என நம்புகிறேன்.

இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நமது சகோதரர்களும் ஒருநாள் அவர்களின் ஆன்மாவின் குரலைக் கேட்டு இந்தியாவுக்கு திரும்புவார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.

பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடன் ஆழ்ந்த தொடர்பு இருப்பதாக கருதுகிறார்கள். சிலர் மட்டுமே தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றிப் பேசுகிறது. அன்பு, ஒற்றுமை மற்றும் உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம், நமது சொந்தப் பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் திரும்பி வந்து நான் இந்தியா, நான் திரும்பிவிட்டேன் என்று கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News