இந்தியா
null

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து: காரை ஓட்டிய பெண் டாக்டர் மீது வழக்கு பதிவு

Published On 2022-11-05 14:39 GMT   |   Update On 2022-11-05 15:14 GMT
  • டாக்டரின் கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலேயிடம் வாக்குமூலம் பெற்றனர்.
  • டாக்டர் அனஹிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மும்பை:

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். மும்பை அருகே பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. விபத்தில் சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜகாங்கிர் ஆகியோர் பலியானார்கள்.

இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனஹிதா மற்றும் அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலே ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த விபத்தின்போது காரை ஓட்டிய பெண் டாக்டர் அனஹிதா பந்தோலே(வயது 55) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது கணவரும், சைரஸ் மிஸ்திரியின் நண்பருமான டேரியல் பந்தோலேயிடம் வாக்குமூலத்தை பெற்றனர். அவரின் வீட்டில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அனஹிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அனஹிதா இப்போதும் மருத்துவமனையின் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை.

Tags:    

Similar News