இந்தியா

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் வெட்டி படுகொலை

Published On 2024-02-23 08:53 IST   |   Update On 2024-02-23 08:53:00 IST
  • கோவில் திருவிழாற்கு சென்றபோது மர்ம நபர்கள் கோடரியால் தாக்குதல்.
  • பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கொயிலாண்டியில் செரியபுரம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோழிக்கோடு நகர மத்திய உள்ளூர் குழு செயலாளர் பிவி சத்யநாதன் (வயது 62) கலந்து கொண்டார்.

நேற்றிரவு மர்ம கும்பல் கோடரியால் அவரை கொடூரமாக வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் சத்யநாதன். உடனடியாக மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் நான்கு இடங்களில் கோடரியால் வெட்டப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும், ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

சத்யநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொயிலாண்டியில், அக்கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

Similar News