இந்தியா

கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் மனைவிகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட காங். பிரமுகர் கைது

Published On 2023-09-23 11:11 GMT   |   Update On 2023-09-23 11:11 GMT
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ரஹீம் என்பவரின் மனைவி அம்பிரிதா போலீசில் புகார் செய்தார்.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுடைய மனைவிகளின் படங்களை அவதூறு ஏற்படும் வகையில் மார்பிங் செய்து வெளியிட்டது ஏன்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பரஸ்சலா பகுதியைச் சேர்ந்தவர் அபின். காங்கிரஸ் பிரமுகரான இவர், கட்சியில் உள்ளூர் வார்டு தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவர் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள தலைவர்களின் மனைவிகளுக்கு எதிராக அவதூறு பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அவர், கம்யூனிஸ்டு தலைவர்களின் மனைவிகளுடைய படங்களை மார்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ரஹீம் என்பவரின் மனைவி அம்பிரிதா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் புகார் கூறப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் அபின், போலி சுய விவரத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை பதிவிட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுடைய மனைவிகளின் படங்களை அவதூறு ஏற்படும் வகையில் மார்பிங் செய்து வெளியிட்டது ஏன்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News