இந்தியா

லண்டனில் விருது வென்ற சென்னை மெட்ரோ ரெயில்.. இது தான் காரணம்..

Published On 2023-11-21 12:29 GMT   |   Update On 2023-11-21 12:29 GMT
  • மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
  • சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம்.

பொதுமக்களின் அதிநவீன போக்குவரத்து முறையாக அறிமுகமாகி இன்று அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக உருவெடுத்து இருக்கிறது சென்னை மெட்ரோ ரெயில். நகரின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் துவங்கப்பட்டு, தற்போது நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதில் இருந்தே, மெட்ரோ ரெயில் சேவைக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொள்ள முடியும்.

நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களிலும், நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித சிரமும் இன்றி பயணிக்க செய்யும் சேவையை மெட்ரோ ரெயில் வழங்குகிறது. அந்த வகையில், போக்குவரத்து மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளை பாராட்டும் வகையிலும், அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் லண்டன் பாராளுமன்றத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு "கிரீன் ஆப்பிள் சுற்றுச்சூழல் விருது" வழங்கப்பட்டு இருக்கிறது.

கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரெயில் இந்தியா நிறுவனம் தங்கம் வென்றதை அடுத்து இந்த விருதுக்கான சான்றிதழ் மற்றும் பச்சை நிற ஆப்பிள் சின்னம் ஒன்றும் கோப்பையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News