இந்தியா

வாக்களிக்க தவறாதீர்கள்: வாக்காளர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

Published On 2024-04-20 11:17 GMT   |   Update On 2024-04-20 11:17 GMT
  • அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது.
  • ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

2024 மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் என் வாக்கு என் குரல் (My Vote My Voice) திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்கள், இது நம் நாடு. அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது. ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. குடிமக்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வாக்களிப்பதாகும்

நம்முடைய சிறந்த தாய்நாட்டு மண்ணில் உள்ள மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நம் தேசத்திற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வெறும் ஐந்து நிமிடங்கள். இது செய்யக்கூடியது, இல்லையா? பெருமையுடன் வாக்களிப்போம். "என் வாக்கு, என் குரல்"

இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News