40 வருட கட்சி தொண்டரை பார்த்ததும் காரை நிறுத்திய சந்திரபாபு நாயுடு
- சந்திரபாபு நாயுடு தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினார்.
- இந்த சம்பவத்தால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று கோவில் மற்றும் ஆன்மீகம் சம்பந்தமாக மாநாடு ஒன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 3 மாநில முதல்- மந்திரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் சந்திரபாபு நாயுடு காரில் புறப்பட்டு சென்றார். மங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சேஷாசல நகரை சேர்ந்த அஜீஷ் பாஷா என்ற தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் நரைத்த தலைமுடியுடன் நின்று கொண்டிருந்தார்.
அவரை கண்டதும் சந்திரபாபு நாயுடு தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினார்.
கார் நின்றதும் கண்ணாடியை இறக்கிவிட்டு சாலையோரம் நின்றிருந்த அஜீஷ் பாஷை பெயரை கூறி அருகே வருமாறு அழைத்தார். அதனை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்ட தொண்டர் அவர் அருகில் சென்றதும் நலம் விசாரித்துவிட்டு சந்திரபாபு நாயுடு புறப்பட்டு சென்றார். இதனால் சாலையோரம் நின்ற தொண்டர் உணர்ச்சிவசப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு என்னை 40 வருடங்களாக அறிவார். நான் அவரைப் பார்க்க வந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சாலையின் ஓரத்தில் நின்றேன்.
ஆனாலும் அவர் என்னை நினைவில் வைத்து நலம் விசாரித்தார். இந்த வாழ்க்கைக்கு இது போதும் என்றார்.
இந்த சம்பவத்தால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.