இந்தியா

மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் அமைதி குழு அமைப்பு - உள்துறை அமைச்சகம்

Update: 2023-06-10 12:24 GMT
  • மணிப்பூர் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கலவரம் குறித்து விசாரிக்க மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இம்பால்:

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் ரோந்து சென்றனர். அப்போது அதிரடியாக நடத்திய சோதனையில் கலவரக்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என அம்மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, மத்திய அரசு சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவை விசாரணைக்காக மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் இது குறித்து 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, மணிப்பூரில் நிலைமையை பற்றி அறிந்து கொள்ள அம்மாநில முதல் மந்திரி பைரன் சிங்கை அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், கலவரம் பாதித்த மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கவர்னர் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

இதில் மாநில முதல் மந்திரி, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு சம்பந்தப்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Tags:    

Similar News