இந்தியா

CBSE 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

Published On 2025-05-13 11:43 IST   |   Update On 2025-05-13 11:43:00 IST
  • கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

நாடு முழுவதும் CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.

பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்ற CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic ஆகிய இணையதளங்களில் வெளியாகி உள்ளது. 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 5 விகிதம் அதிகம். 91 சதவீதத்துக்கும் அதிகமான மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 



Tags:    

Similar News