இந்தியா

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ல் தொடங்கும்: மத்திய அரசு தகவல்

Published On 2025-06-04 17:40 IST   |   Update On 2025-06-04 17:40:00 IST
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
  • தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை இரு கட்டமாக நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டில் நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. எனவே 16 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News