இந்தியா

நடுக்கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளான சரக்கு கப்பல்- வீடியோ

Published On 2025-05-25 08:22 IST   |   Update On 2025-05-25 08:22:00 IST
  • கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.

கொச்சிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு MSC ELSA3- கப்பலில் பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

கப்பல் கொச்சியிலிருந்து தென்மேற்கு சுமார் 38 மைல் தொலைவில் இருந்ததுபோது கடலில் சாய்ந்தது. அப்போது கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் விழுந்தது. இதனை தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உதவி கோரி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது. இந்த மீட்பு பணியில் கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.   



Tags:    

Similar News