இந்தியா

உண்டு உறைவிட பள்ளியில் தலைமை ஆசிரியர் உல்லாசம்: சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு

Published On 2022-12-19 14:51 IST   |   Update On 2022-12-19 14:51:00 IST
  • தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.
  • துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரி தகவல்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டணம் சிலகலப்புடி ரெயில் நிலையம் அருகே அரசு  சிறுபான்மையினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இதில் மசூலிப்பட்டணத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் விடுதி அறையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த்பாபு இரவு நேரங்களில் பெண் கம்ப்யூட்டர் ஆபரேட்டருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை கவனித்த மாணவர்கள், அதனை செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்ளுக்கு பகிர்ந்துள்ளனர். மாணவர்கள் வீடியோ எடுத்ததை அறிந்த தலைமை ஆசிரியர் அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். சில மாணவர்கள் அடிக்கு பயந்து உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், தலைமை ஆசிரியரின் உல்லாச வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதை அறிந்த சிலகலப்புடி போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் ஆனந்த்பாபுவை கைது செய்தனர். இந்நிலையில் உல்லாச வீடியோ குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News