இந்தியா

அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிய பிறப்பு சான்றிதழ்: இன்று முதல் ஆன்லைன் மூலம் பெறலாம்

Published On 2023-10-01 09:29 GMT   |   Update On 2023-10-01 09:29 GMT
  • திருமணப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.
  • இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.

நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ். அதன்படி, இன்று முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.

ஆதார் அட்டை, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் வழங்குதல் , அரசுப் பணிகளுக்கான நியமனம் ஆகிய சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பயன்படுத்தப்படும்.

அதன்படி திருமணம்ப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்க பிறப்புச்சான்றிதழ் ஆவணமாக பயன்படுத்தலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் மேற்கூறிய பணிகளுக்கு பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த, மசோதா நிறைவேறி வெற்றிபெற்ற நிலையில், தற்போது சட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும். இதுவரை பிறப்பு சான்றிதழை பலரும் டிஜிட்டல் முறையில் பெறவில்லை.

இதன் மூலம் வயது தொடர்பான பல்வேறு சேவைகள், தேர்விற்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.

Tags:    

Similar News