இந்தியா

ஐதராபாத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு எதிரான விளம்பர பலகைகள்...

Update: 2022-07-01 02:03 GMT
  • 3-ந்தேதி ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
  • 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐதராபாத் :

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஐதராபாத்துக்கு வருகிறார்.

கவர்னர் மாளிகையில் தங்குகிறார். 3-ந்தேதி மாலையில், ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவரது வருகையையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், ''பை பை மோடி'' என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அவற்றை அகற்றினர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கு எதிராக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News