இந்தியா

ஒடிசாவில் குடிசைப் பகுதியை பார்வையிட்ட பில் கேட்ஸ்: குடியிருப்பு வாசிகளுடனும் உரையாடினார்

Published On 2024-02-28 06:46 GMT   |   Update On 2024-02-28 06:54 GMT
  • ஒடிசாவின் பல்வேறு துறைகள் பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.
  • குடிசைவாசிகள் நில உரிமை, குடிநீர் குழாய் வசதி, கழிப்பிட வசதி குறித்து கேட்டறிந்தார்.

மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனரான பில்கேட்ஸ் இன்று காலை ஒடிசா மாநிலம் புவேனஸ்வரில் உள்ள பிஜு ஆதார்ஷ் காலனிக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகளை பார்வையிட்டுள்ளார். மேலும், அங்குள்ள குடியிருப்புவாசிகளுடன் உரையாடினார். அப்போது அரசு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

இது தொடர்பாக மாநில வளர்ச்சி துறைக்கான கமிஷனர் அனு கார்க் கூறுகையில் "குடிசைவாசிகள் நில உரிமை பெற்றது, குடிநீர் குழாய் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி பெற்றுள்ளதை அவருக்கு நேரில் சென்று காண்பித்தோம். குடிசை பகுதிகள் நவீன காலனியாக மாற்றம் அடைந்ததை பார்த்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்" என்றார்.

மாநில நகர்ப்புற வளர்ச்சிதுறையின் செயலாளர் ஜி மதி வதனன், "மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன் அடைந்தவர்கள் உடன் பில்கேட்ஸ் பேசினார்" என்றார்.

பில்கேட்ஸ் உடன் பேசிய பெண்மணி ஒருவர் "நாங்கள் இதற்கு முன்னதாக வாழ்ந்த வாழ்க்கை, தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்" என்றார்.

நேற்று ஒடிசா வந்த பில்கேட்ஸ் பின்னர் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.

ஒடிசாவின் பல்வேறு துறைகள் பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகனுமான ஆனந்த் திருமண விழாவில் பில் கேட்ஸ் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் ஜூலை 12-ந்தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள் இருக்கிறார்கள்.

Tags:    

Similar News