இந்தியா

கொல்கத்தா காளி கோவிலை புதுப்பிக்கும் பணியில் ரிலையன்ஸ் நிறுவனம்

Published On 2023-11-21 12:42 GMT   |   Update On 2023-11-21 12:42 GMT
  • கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது.
  • 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்கு வங்காள மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலை புதுப்பிக்கும் ஒரு லட்சிய திட்டத்தை எடுத்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கட்டமைப்புகள் உள்பட முழு கோவில் வளாகத்தையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News