இந்தியா

நள்ளிரவில் பாரில் ரகளை.. ரைபிள் துப்பாக்கியால் DJ கொலை.. திக்திக் காட்சிகள்

Published On 2024-05-27 10:12 GMT   |   Update On 2024-05-27 10:12 GMT
  • பாருக்கு இரவு 1 மணியளவில் 4 பேருடன் சார்ட்ஸ் அணிந்து வந்த அந்த நபர் மது கேட்டுள்ளார்.
  • ரைபிளால் அந்த நபர் சுட்டதில் படுகாயமடைந்த டிஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஜார்கண்ட் தலைநற் ராஞ்சியில் நள்ளிரவில் பாரில் மது கொடுக்க மறுத்ததால் மர்ம நபர் ஒருவர் ஆளுயர ரைபிள் துப்பாக்கியை எடுத்துவந்து பாரில் உள்ள டிஜேவை சுட்டுக் கொன்ற சம்பவம் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

பாருக்கு இரவு 1 மணியளவில் 4 பேருடன் சார்ட்ஸ் அணிந்து வந்த அந்த நபர் மது கேட்டுள்ளார். ஆனால் பார் மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் தெறிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர், ரைபிள் வகை துப்பாக்கியை எடுத்துவந்து அங்கிருந்த பாடல் வாசிக்கும் டிஜே மீது நீட்டிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ரைபிளால் அந்த நபர் சுட்டதில் படுகாயமடைந்த டிஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ராஞ்சி காவத்துறையினர் அந்த மர்ம நபரைத் தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி அவருக்கு ரைபிள் எப்படி கிடைத்திருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும் ஆளுயரம் உள்ள ரைபிளை கொண்டு நடந்த இந்த கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Similar News