இந்தியா

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு

Published On 2023-05-09 05:05 GMT   |   Update On 2023-05-09 07:12 GMT
  • ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கும் வழங்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்தது.
  • அடையாள அட்டை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கு வழங்கினால் அது தவறுகளுக்கு வழிவகுக்கும்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் பொது மக்களின் விபரங்களை தெரிந்து கொள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கும் வழங்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடையாள அட்டை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கு வழங்கினால் அது தவறுகளுக்கு வழிவகுக்கும். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியது.

ஆனால் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது. கடந்த 5-ந் தேதி வரை பொதுமக்கள் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை அமைச்சகத்துக்கு தெரிவிக்கலாம் எனக்கூறியிருந்தது.

கடந்த 5-ந் தேதி இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாள் இதனை நீட்டித்து உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மே 20-ந் தேதி வரை ஆதார் அடையாள அட்டை விபரங்களை தனியாரும் சரிபார்க்க அனுமதி அளிக்கலாமா? என்பது பற்றிய கருத்துக்களை பொதுமக்கள் தொடர்ந்து தெரிவிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது.

Tags:    

Similar News