இந்தியா

ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல ஆன்லைனில் முன்பதிவு வசதி- ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Published On 2023-05-05 18:19 GMT   |   Update On 2023-05-05 18:19 GMT
  • டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.
  • விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ரெயிலில் கொண்டு செல்லஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட உட்கார்ந்தபடி பயணம் செய்யக்கூடிய சாமான்கள் ஏற்றிச்செல்லும் (எஸ்எல்ஆர்) கோச்சில் விலங்குகள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம் என்றும் இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் ரெயில்வே வாரியம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News