இந்தியா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்திய அணியில் ரகானே 15 மாதங்களுக்கு பிறகு தேர்வு

Published On 2023-04-25 06:40 GMT   |   Update On 2023-04-25 06:40 GMT
  • 34 வயதான ரகானே 82 டெஸ்டில் விளையாடி உள்ளார்.
  • ரகானே ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ரன்கள் எடுத்துள்ளார்.

புதுடெல்லி:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்யின்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று அறிவித்தது.

இந்திய அணியில் ரகானே இடம்பெற்றுள்ளார். 15 மாதங்களுக்கு பிறகு அவர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 34 வயதான ரகானே 82 டெஸ்டில் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் ஆடினார்.

ஸ்ரேயாஸ் அய்யர் முதுகுவலி காயத்தால் அவதிப்படுகிறார். இதற்காக அவர் இங்கிலாந்து சென்று ஆபரேசன் செய்ய உள்ளார். இதனால் அவர் அணியில் இடம்பெறவில்லை. அவர் இடத்துக்கு ரகானே தேர்வாகி உள்ளார்.

சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரகானே ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார். மேலும் டெஸ்டில் அனுபவம் வாய்ந்தவர். இதனால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ரகானே ஐ.பி.எல். போட்டியில் இந்த சீசனில் 5 ஆட்டத்தில் 2 அரை சதத்துடன் 209 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக்ரேட் 199.4 ஆகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

ரோகித்சர்மா (கேப்டன்) சுப்மன்கில், புஜாரா, வீராட் கோலி, ரகானே, லோகேஷ் ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்.

Tags:    

Similar News