ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 800ஆக உயர்வு: அனைத்து உதவிகளும் செய்ய தயார்- இந்திய பிரதமர் மோடி
- ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.
- இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிய இடிபாடுகளுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய நேரப்படி மதியம் 2.45 மணி வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணி நடைபெற்று வருவதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்து வருத்த அளிக்கிறது என இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.