இந்தியா

வனக்காவலரை கொன்ற காட்டுயானை

Published On 2023-09-11 06:32 GMT   |   Update On 2023-09-11 06:32 GMT
  • காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
  • போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் திருமேடு வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்தவர் இரிம்பன் குமரன் (வயது55). சம்பவத்தன்று திருச்சூர் மாவட்டம் வாழச்சல் வனப்பிரிவுக்கு உட்பட்ட கரடிப்பாரா அருகே உள்ள ஊலச்சேரி பகுதியில் புகுந்த காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் அங்குள்ள குழிக்குள் குமரன் மற்றும் சுனில் ஆகியோர் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குமரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News