லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்- நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு
விமான நிலையங்களைப் போல நாட்டுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்; அப்போதுதான் மருத்துவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும். சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்" இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) தலைவர் மருத்துவர் ஆர்.வி.அசோகன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு, கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்.
கொல்கத்தா மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் 400 மருத்துவமனைகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வெளியே மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ள நாடு தழுவிய மருத்துவர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தம் தொடங்கியது.
கடந்த வாரம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.