இந்தியா

காதலனுடன் மது குடித்து நடுரோட்டில் இளம்பெண் ரகளை

Published On 2024-05-25 05:38 GMT   |   Update On 2024-05-25 05:38 GMT
  • வயதான நபர் ஒருவர் இது போல் பெண்கள் மது குடிப்பது நமது கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல என்றார்.
  • இளம் பெண்ணை அவரது காதலன் எவ்வளவு சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினாலும் தகராறு செய்தார்.

தெலுங்கானா மாநிலம், நாகோல் அருகே பதுல்லாலா குடா தேசிய நெடுஞ்சாலைக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் வந்தார்.

காரை சாலையோரைம் நிறுத்திய இளம் பெண்ணும் அவரது காதலனும் பீர் பாட்டிலை திறந்து குடித்தனர்.

இளம்பெண் ஒருகையில் பீர் மற்றொரு கையில் சிகரெட் பிடித்தபடி சினிமா பாடல்களைப் பாடி அந்த வழியாக நடை பயிற்சி சென்றவர்களை தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டார்.

நடைபயிற்சி சென்ற ஒரு சிலர் நமக்கு ஏன் வம்பு என கண்டும் காணாமல் சென்றனர். சில வயதானவர்கள் இது போல் பொது இடத்தில் மது குடித்து ரகளையில் ஈடுபடலாமா என தட்டி கேட்டனர். அதற்கு இளம்பெண் நீ மது குடிக்க வில்லையா? உன்னுடைய பிள்ளைகள் மது குடிப்பது இல்லையா. இதைக் கேட்க நீ யார் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


அப்போது நடைபயிற்சி சென்ற ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இருப்பினும் இளம்பெண் ஒரு கையில் பீர் பாட்டிலும் மறுகையில் சிகரெட் வைத்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை நிறுத்தவில்லை.

இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அப்போது வயதான நபர் ஒருவர் இது போல் பெண்கள் மது குடிப்பது நமது கலாசாரத்துக்கு ஏற்றது அல்ல என்றார். நீங்கள் அந்த காலத்து ஆட்கள் இப்போது இருப்பது நவீன கலாசாரம் நாங்கள் இப்படித்தான்.

நாங்கள் மது குடிப்பதால் உங்களது கலாசாரம் கெட்டுவிடும் என்றால் நீங்கள் கண்டு கொள்ளாமல் செல்ல வேண்டியது தானே. எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என மீண்டும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இளம் பெண்ணை அவரது காதலன் எவ்வளவு சமாதானம் செய்து தடுத்து நிறுத்தினாலும் தகராறு செய்தார். அப்போது இந்த நிகழ்வை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை இளம்பெண் செருப்பு காலால் எட்டி உதைத்து கைகளால் தாக்கினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நடைபாதையில் சென்றவர்கள் இளம் பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக காரில் தள்ளி விட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த இளம் பெண் தனது காரை எதிர் திசையில் அதிவேகத்தில் ஓட்டி சென்றார். இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணையும் அவரது காதலனையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News