கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் - மத்திய அரசு
- கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
- 2011-19 க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக வழங்கினார்.
அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
2011-19 க்கு இடையில் 11,89,194 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 14 ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.
வெளிநாட்டு குடியுரிமையைத் தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் வளைகுடா நாடுகளில் வேலை கிடைப்பதாக போலியான வேலை வாய்ப்புகளால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு, கடத்தல் கும்பல்களுக்கு இரையாகி வருவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.