இந்தியா
null

இந்தியாவில் வளாகங்களை திறக்கும் 9 பிரிட்டன் பல்கலைக்கழகங்கள்.. மோடி - ஸ்டார்மர் சந்திப்பின் ஹைலைட்

Published On 2025-10-09 18:31 IST   |   Update On 2025-10-09 18:35:00 IST
  • பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்

இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.

இன்று பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் பிரதிநிதிகள் மட்ட சந்திப்பை நடத்தினர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன்.

பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும்.

ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம் " என்று தெரிவித்தார்.

இதன்பின் பேசிய கெய்ர் ஸ்டார்மர், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும். 

உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்காமன். காமன்வெல்த், ஜி20 இல் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்' என்று கூறினார்.  

Tags:    

Similar News