இந்தியா

குஜராத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை- போலீஸ் விசாரணை

Published On 2023-10-28 18:59 IST   |   Update On 2023-10-28 18:59:00 IST
  • உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • பண பரிவர்த்தனை தொடர்பாக சில தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாலன்பூர் ஜகத்நாத் சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

எட்டு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, மணீஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சூரத்தின் துணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் பரோட் கூறுகையில், "சூரத்தின் பாலன்பூரில் உள்ள சித்தேஷ்வர் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினர் வசித்து வந்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு வந்தோம். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தில் ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆறு பேர் விஷம் குடித்து ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர்களில் 3 குழந்தைகள் உள்ளனர். தற்கொலைக் குறிப்பும் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பண பரிவர்த்தனை தொடர்பாக சில தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

Tags:    

Similar News