இந்தியா

மகாராஷ்டிராவில் பிரசாதம் சாப்பிட்டு பாதிப்பு: பக்தர்களுக்கு சாலையில் டிரிப்ஸ் ஏற்றிய அவலம்

Published On 2024-02-21 12:37 GMT   |   Update On 2024-02-21 12:37 GMT
  • மகாராஷ்டிராவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
  • அவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 600 கிராம மக்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. பற்றாக்குறை காரணமாக பலருக்கும் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரங்களின் அடியில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டு கயிறுகளில் டிரிப்ஸ் பாட்டில்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும் சிலருக்கு மரங்களில் பாட்டில்கள் பிணைக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் திடீரென மயக்கமடைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News