இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து இன்று காலை 6 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2023-08-30 04:37 GMT   |   Update On 2023-08-30 04:37 GMT
  • கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர்அணையின் நீர்மட்டம் 101.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 73.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2594 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரத்து 398 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News