இந்தியா

மொத்தம் 50 நகரங்களில் 5ஜி சேவை, குஜராத்தில் மட்டும் 33 இடங்கள்... பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு

Published On 2022-12-14 11:45 GMT   |   Update On 2022-12-14 11:45 GMT
  • 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன.
  • ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகிறது.

புதுடெல்லி:

இந்தியாவில் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும்.

மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தலா ஒரு நகரத்தில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவை தொடங்கபட்டது. நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகின்றன. மேலும், விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News