இந்தியா

டெல்லியில் லேசான நிலநடுக்கம் - ரிக்டரில் 4.0 ஆக பதிவு

Published On 2025-02-17 06:49 IST   |   Update On 2025-02-17 06:50:00 IST
  • பூமியில் இருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெல்லி என்.சி.ஆர்-இன் சில பகுதிகளில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புது டெல்லியில் பூமியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. 

Tags:    

Similar News