இந்தியா

டெல்லியில் பள்ளிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2025-09-29 05:09 IST   |   Update On 2025-09-29 05:09:00 IST
  • டெல்லியில் பள்ளிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்ட் மிரட்டல் விடுக்கப்பட்டது.
  • சோதனைக்குப் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.

புதுடெல்லி:

விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது சமீப காலமாக தொடர் கதையாக உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதோடு மக்களும் பீதி அடைகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. எனினும் வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

Tags:    

Similar News