இந்தியா

கட்டுமான தளத்தில் பயங்கர விபத்து- லிப்ட் அறுந்து விழுந்து பொறியாளர் பலி

Published On 2023-01-10 17:50 IST   |   Update On 2023-01-10 17:50:00 IST
  • தற்காலிக லிப்டை அகற்றும் பணி நடைபெற்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது
  • இந்த விபத்தில் இறந்தவர் பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ரித்திக் ரத்தோர் என்பது தெரியவந்துள்ளது

கிரேட்டர் நொய்டா:

கிரேட்டர் நொய்டாவில் கட்டுமானம் நடைபெறும் பகுதியில் தற்காலிக லிப்ட் அறுந்து விழுந்ததில் பொறியாளர் ஒருவர் பலியானார்.

நாலெட்ஜ் பார்க் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை 4:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குடியிருப்பு கோபுரங்களில் ஒன்றின் 25வது மாடியில் இருந்து கட்டுமான பகுதிக்கு நிறுவப்பட்டிருந்த தற்காலிக லிப்டை அகற்றும் பணி நடைபெற்றபோது, இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் இறந்தவர் பிரோசாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான ரித்திக் ரத்தோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்காலிக லிப்டை அகற்வதற்காக வந்திருந்தார். லிப்டின் சுமையை தாங்க முடியாமல், தூண்கள் சரிந்ததால் மொத்மாக தரையில் விழுந்துள்ளதாக காவல்துறை அதிகாரி தினேஷ்குமார் சிங் கூறினார்.

Tags:    

Similar News