இந்தியா

21-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. பெண் ஊழியர்

Published On 2025-06-05 17:31 IST   |   Update On 2025-06-05 17:31:00 IST
  • விடியற்காலை தனது தோழி வீட்டிற்கு சென்றுள்ளார்.
  • 21ஆவது மாடிக்கு சென்ற அவர், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 25 வயதேயான ஐ.டி. பெண் ஊழியர் 21ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே என்ற அந்த பெண் ஊழியர், அதிகாலை 4.30 மணிக்கு, அவளுடைய தோழி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். திடீரென அவரது நண்பர் வசித்து வரும் 21ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

நான் வாழ்ந்து முடித்துவிட்டேன். இனிமேல் எனக்கு வாழ விருப்பமில்லை என கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் இந்த முடிவை எடுத்ததற்காக பெற்றோர் மற்றும் நண்பர்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News