இந்தியா

நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்.. பயணிகளுக்கு எச்சரிக்கை

Published On 2025-05-09 07:38 IST   |   Update On 2025-05-09 07:38:00 IST
  • இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.
  • பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதக்கலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதுதவிர்த்து இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை அடைய அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் விமானத்தில் ஏறுவது மற்றும் செக்-இன் செய்வது சுமூகமாக இருக்கும்.

இது தவிர, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News