இந்தியா

உ.பி.யில் சோகம்: மழை தொடர்பான விபத்துகளில் 22 பேர் பலி

Published On 2025-04-11 00:18 IST   |   Update On 2025-04-11 00:18:00 IST
  • உ.பியின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதுடன் மழை பெய்தது.
  • இதன் காரணமாக பதேபூர், அசம்கர்க் பகுதியில் தலா 3 பேர் பலியாகினர்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசியதுடன் மழை பெய்தது.

இதன் காரணமாக பதேபூர், அசம்கர்க் பகுதியில் தலா 3 பேர் பலியாகினர்.

பெரோசாபாத், கான்பூர் தேஹட், சீதாப்பூர் மாவட்டங்களில் தலா 2 பேரும், காஜிப்பூர், கோண்டா, அமேதி, சந்த் கபிர் நகர், சித்தார்த்நகர், பாலியா, கன்னோஜ், பாராபங்கியில் தலா ஒருவரும் பலியாகினர்.

ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் பெய்த மழையில் சிக்கி 22 பேர் பலியானதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும், பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News